ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்...

 

கோயிலுக்கு கிளம்பும் முன் இதை வாசியுங்கள்!

கோயிலில் மூலவருக்கோ, பிரகாரத்திலுள்ள மற்ற சுவாமிகளுக்கோ அபிஷேகம் செய்யும் போது உட்பிரகாரத்தில் வலம் வருவது கூடாது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி நாளில் வில்வ இலைகளைப் பறிக்கக்கூடாது. அங்கவஸ்திரம், துண்டு ஆகியவற்றை தோளில் இருந்து எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும். கொடி மரம், நந்தி, பலிபீடம், கோபுரம் நிழல்களை மிதிப்பது கூடாது. நந்திக்கு குறுக்கே செல்லக்கூடாது. பிரகாரத்தை வலம் இடமாகச் சுற்றிக் கொண்டு போகக் கூடாது. கோயிலுக்குள் வீண்கதைகளையோ, தகாத வார்த்தைகளையோ பேசக்கூடாது. கோயிலுக்குள் தூங்குவது கூடாது. விளக்கில்லாத போதோ, திரையிட்டிருக்கும் போது தெய்வங்களை வணங்குவது கூடாது. கோயிலுக்குச் சென்று திரும்பியதும் கால் கழுவக் கூடாது. சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி முன்பு அமைதியாக வணங்க வேண்டும். கைதட்டுதல், நூலைப் போடுதல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது


     1. ஒருவர் மற்றொருவருடன் பேசக் கூடாது.
2. சந்நிதியை மறைக்காமல் நிற்க வேண்டும்.
3. கடவுளைப் பற்றிய விஷயத்தை மட்டும் பேச வேண்டும்.
4. வழிபாட்டில் மனதை முற்றிலுமாக ஒருமுகப் படுத்த வேண்டும்.
5. இருந்த இடத்திலிருந்தே பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
6. வரிசையாகச் சென்று பிறர்க்கு இடையூறு இல்லாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
7. ஆலயத்தினுள் எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும்.
8. வழிபாடு முடிந்த பின்பு ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.
9. தெய்வத்திற்கு நைவேத்தியமாகப் படைக்கப்படும் உணவுப் பொருள்கள் மக்களுக்குப் பிரசாதமாக    வழங்கப்பட  வேண்டும்.