நாவை அடக்க வேண்டும்?



  • ஒரு மனிதன் தன்னுடைய நாவைக் காத்துக் கொண்டால் அல்லா அவனுடைய மானத்தைக் காத்துக் கொடுப்பான். இறை வணக்கம் செய்வதற்கு சிரமப்பட வேண்டும். ஆனால் சிரமமில்லாத ஒரு வணக்கம் உண்டு என்றால் அது மவுனம்தான்.
  • பேசுவது வெள்ளி என்றால் பேசாமலிருப்பது தங்கமாகும்.
  • தேவைக்குப் போக மீதிப் பணம் வைத்திருப்பவர் தர்மம் செய்யத் தயங்குகிறார், சேர்த்து வைக்கிறார். ஆனால் தேவையில்லாத பேச்சுக்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
  • நாவை அடக்கி ஆளுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்திற்கு கீழ் படிந்து அது இயங்கட்டும். இதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது.
  • எனக்குப் பிறகு நான் பயப்படுவதெல்லாம் திறமை மிக்க நாவு படைத்த நயவஞ்சகரைப் பற்றியதே.
  • கெட்ட வார்த்தைகளைப் பேசுபவன் மீது அல்லா கோபமடைகிறான். அதிகமான பாவங்கள் நாவினால்தான் உண்டாகின்றன.
  • உன் நாவைப் பேணிக்கொள். நீ செய்த பாவங்களை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்து. போர்க்களத்தில் அல்லாவுக்காக உயிர்த் தியாகம் சிந்தும் செந்நீரை விட அல்லாவின் பயத்தினால் அழுபவரின் கண்ணீர் பெருமைக்குரியதாகும்.
  • எவர் அதிகமாக வீண் பேச்சு பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலைமையை அடைவார்.             
                                                                                                                                                                                                    -நபிகள் நாயகம்.