இந்து மதம் கூறும் சில அறிவுரைகள்...


1. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.

2. பெண்கள் எதிர்பாராமலோ, தவறு என்று தெரியாமலோ கற்பிழக்க நேரிட்டால் புண்ணிய நதியில் நன்கு மூழ்கிக் குளித்தால் அந்த குறை அகன்று விடும்.

3. உடல் ஊனமுற்றவர், கல்வியில்லாதவர்கள், முதியவர்கள், வறுமையிலிருப்பவர்கள் குறைகளை சுட்டிக் காட்டிப் பேசக் கூடாது.

4. பிறர் அணிந்த ஆடைகள், செருப்பு, மாலை,படுக்கை, இருக்கை போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது.

5. பகலில் உறங்குதல், உடலுறவு கொள்வது, பால் பருகுவது கூடாது.

6. நெல்லிக்காய், ஊறுகாய், இஞ்சி, தயிர் இவற்றை இரவில் உண்ணக் கூடாது.

7.நோயாளி, கர்ப்பிணி, உடல் ஊனமுற்றவர், முதியவர்கள் போன்றவர்களுக்கு ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும்.

8. நெருப்புத் துண்டுகளை அணைக்காமல் கீழே போடக் கூடாது.

9. இருட்டில் வெளிச்சமில்லாமல் சாப்பிடக் கூடாது.   

10. நம்மை ஒருவர் கேட்காத நிலையில், நாம் அவருக்கு அறிவுரை கூறக்கூடாது.

- சுவாமி சிவானந்தம் எழுதிய "தினசரி வாழ்வில் செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவையும்"  நூலிலிருந்து...