பெருமை சேர்க்கும் சிவத்தலங்கள்...


பன்னிரண்டு ஜோதி லிங்கங்கள்

இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் உங்களுக்குத் தெரியுமா? (அடைப்புக் குறிக்குள் மாநிலங்கள்).

1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)

2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்)

5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்)

6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்)

9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)

10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)

12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

பஞ்சபூதத் தலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்று கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.  அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள் கீழே...                         (அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர்.

நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா.

தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை.

வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி.

வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்.

ஐந்து தாண்டவங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் இடங்கள் கீழே...

தில்லை-ஆனந்த தாண்டவம்.

 திருவாரூர்-அசபா தாண்டவம்.

 மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.

அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.

திருமுருகன் பூண்டி-பிரம தாண்டவம்.


ஐந்து மன்றங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் (அடைப்புக் குறிக்குள் சபைகள்)  அமைந்துள்ள இடங்கள் கீழே...

தில்லை-பொன் மன்றம் (கனக சபை).

திருவாலங்காடு-மணி மன்றம் (இரத்தின சபை).

மதுரை-வெள்ளி மன்றம் (இராஜ சபை).

திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).

திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

சத்த விடங்கத் தலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள் கீழே... (அடைப்புக் குறிக்குள் இறைவனின் நடனம்)

திருவாரூர்-வீதிவிடங்கர் (அசபா நடனம்).

திருநள்ளாறு- நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).

திருநாகைக் கோரணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி
நடனம்).

திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட
நடனம்).

திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க
நடனம்).

திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம்).

திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)


முக்தி தரவல்ல தலங்கள்.


முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள் கீழே..

திருவாரூர்-பிறக்க முக்தி தருவது

சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது

திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது

காசி-இறக்க முக்தி தருவது