05. மருத்துவ குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
05. மருத்துவ குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்

உடல் எடையை அதிகரிக்க உதவும் 25 வகையான உணவுகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து உணவில் சேர்த்து, உடல் எடையை அதிகரித்து, அழகான உடலமைப்பைப் பெறுங்கள்.


1. சால்மன் மீன் 
தினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.



2. சூரை மீன் 
சூரை மீன்களில் உள்ள அதிமுக்கியமான கொழுப்பமிலங்கள், உடல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யாமல், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவி புரியும். அதிலும் மதிய உணவில், சீரான முறையில் சூரை மீன் சாலட்டை சேர்த்துக் கொண்டால், கொஞ்சம் வேகமாக உடல் எடையானது அதிகரிக்கும்.


3. இறால் 
கடல் உணவு பிரியர்களா? அப்படியானால் தினமும் இரண்டு முறை இறால்களை சாப்பிடலாம். அதிலுள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், உடலில் கலோரிகளை தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.


4. கோழியின் நெஞ்சுக்கறி 
கோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து, மயோனைஸ் தடவி மதிய உணவோடு சாப்பிடலாம். இது சுவைமிக்க உணவாக மட்டுமல்லாமல், உடல் எடை கூடவும் உதவி புரியும்.

5. கொத்திய மாட்டிறைச்சி 
சத்துள்ள கொத்திய மாட்டிறைச்சியை சாண்ட்விச் உடன் சேர்த்து உண்டால், உடல் எடை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள கொழுப்பு சுலபமாக உள்ளிறங்குவதால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.


6. முட்டை 
உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் கலந்துள்ள முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பிணியும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.


7. சீஸ்/பாலாடைக் கட்டி 
நுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில், சைவ உணவு உண்ணுபவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகம் உள்ளதால், உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும். அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.


8. சிவப்பு இறைச்சி 
போதுமான அளவில் சிவப்பு இறைச்சியை உண்டால், உடலில் புரதச்சத்து உள்ளிறங்கும். அதனை பல வகையில் சமைத்து சாப்பிடலாம். சாஸ் உடன் சேர்த்து அதனை உணவோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.
.


9. ஓட்ஸ் 
ஒரு பௌல் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவாக அமையும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உடனே இது கொடுத்து விடும். ஆகவே ஓட்ஸ் உடன் சேர்த்து க்ரீம், நட்ஸ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்து சுவையை அதிகரித்து கொள்ளுங்கள்.
10. கைக்குத்தல் அரிசி 
கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.


11. பாஸ்தா 
ஒரு கிண்ணத்தில் சுவைமிக்க பாஸ்தாவை போட்டு சாப்பிட்டால், அது திருப்தியான உணவாக அமையும். அதிலும் இது வயிற்றை மட்டும் நிரப்பாமல், அதிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

12. கோதுமை சப்பாத்தி 
கோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம், வெண்ணெய் அல்லது மயோனைஸ் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும். இதனால் வயிறும் வேகமாக நிறையும். இது உடலால் மெதுவாக உட்கொள்ளப்படுவதால், சுலபமாக உடல் எடை அதிகரிக்கும்.

13. பீன்ஸ் 
விலங்கில் உள்ள புரதச்சத்துக்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அதனை சைவ உணவு உண்ணுபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சாஸ் உடன் அதை சமைத்தல், அதில் 300 கலோரிகள் அடங்கியிருக்கும். வேண்டுமெனில் அதனுடன் சில பீட்டா ரொட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், சுவைமிக்க உணவாக அது அமையும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்.


14. உருளைக்கிழங்கு 
உருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், சத்தான கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.

15. சேனைக்கிழங்கு 
அதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு உள்ளது. ஒரு முறை அதனை உண்ணும் போது, உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கும். அதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.
16.அவகேடோ (வெண்ணைப் பழம்) 
பட்டர் ப்ரூட் என்றழைக்கப்படும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சூப், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, தேவையான கொழுப்பையும் சேர்க்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.



17. வேர்க்கடலை வெண்ணெய் 
அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.


18. பாதாம் வெண்ணெய் 
ஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையாக விளங்குகிறது பாதாம் வெண்ணெய். மேலும் இதில் அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் நிறைந்துள்ளது. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்டுகளில் சேர்த்த சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதனுடன் சேர்த்து உடல் எடையும் அதிகரிக்கும்.


19. ஆலிவ் எண்ணெய் 
சாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமலும் காக்கும்.



20. பாதாம் பருப்பு 
பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இதனை உடல் எடை கூடுவதற்கான ஆரோக்கியமான சில விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை உண்ணுவதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.
21. ஆளி விதை 
ஆளி விதையில் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அடங்கியுள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை காத்து, உடலை சீரான முறையில் செயல்பட உதவும். எனவே தினமும் போதுமான அளவை ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.
22. முந்திரி 
நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கை முந்திரி பருப்பை சாப்பிடுங்கள். அதிலுள்ள முக்கிய எண்ணெய்கள், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் அணுக்களின் அடுக்குகளில் உய்வூட்டி, சருமம் மென்மையானதாக வைத்துக் கொள்ள உதவும்.


23. வாழைப்பழம் 
வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது கூடுதல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. மேலும் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இது உடனடி சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவி புரியும்.


24. தேங்காய் பால் 
தேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பலவகையான உணவு வகைகளுக்கு சுவையை கூட்டவும் பயன்படுகிறது. தேங்காய் பாலில் செய்த உணவில் அதிக கலோரிகள் இருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்கும்.


25. உலர் திராட்சை 
உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கை உலர் திராட்சையை சாப்பிட்டால், உடலில் ஆரோக்கியமான கலோரிகள் நிறையும். மேலும் நார்ச்சத்தும் தேங்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.

 தனுடன்50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து... அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும்...

முதுகு மற்றும் இடுப்பு வலிக்கு


உங்கள் வேலை நேரம், வேலையின் தன்மை ஆகியவற்றை கண்காணித்து பேக் பெயின் வருவதற்கான தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளவும். கொஞ்ச நேரம் நடப்பது, சிறிய ஓய்வு என வழக்கத்தை மாற்றிக் கொள்ளவும். உங்கள் டயட் சார்ட்டை செக் பண்ணவும்.  எலும்புகள் வலுப்படுவதற்கான உணவுகள் சேர்க்கவும். வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டில் உள்ள அத்தனை பொறுப்புகளையும் தனது தோள்களில் சுமப்பதற்கு பதிலாக கணவர், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வு கிடைப்பதுடன் பேக் பெயின் வரு வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க லாம். தொப்பை விழாத அளவுக்கு வெயிட்டை மெயின்டெய்ன் செய்வது ரொம்ப முக்கியம். 

சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் வீட்டில் செய்யலாம். நன்றாக நிமிர்ந்து படுக்கவும். படுத்த நிலையில் முட்டியை மடக்காமல் உடலை மேலே தூக்க வேண்டும். படுத்த நிலையில் நிலத்தில் இரண்டு கால்களையும் மடக்கி இடுப்பை மட்டும் மேலே தூக்க வேண்டும். இதே போல் குப்புறப் படுத்த நிலையில் தலையை மேலே தூக்குவது, இடுப்பையும் வயிற்றையும் மேலே தூக்குவது ஆகிய பயிற்சிகள் ஒவ்வொன்றையும் ஐந்து முறை செய்வதன் மூலம் பேக் பெயினால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முடிந்த வரை ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். பேக் பெயின் உள்ளவர்கள் குப்புறப் படுத்து உறங்குவதைத் தவிர்க்கலாம். மல்லாந்து படுப்பதை விட ஒருக்களித்துப் படுப்பதே நல்லது. உடல் என்னும் இயந்திரம் ஒழுங்காக வேலை செய்தால்தான் சந்தோஷச் சிகரங்களில் சறுக்கி விளையாட முடியும். உடலை கவனித்தால் உற்சாகமாய் வலம் வரலாம்.

வீட்டு வைத்தியம்

ஆடாதொடா வேரை கஷாயம் வைத்து குடித்தால் உடல் வலிகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நி வாரணம் கிடைக்கும். 
ஆல மர மொட்டுகளைப் பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும். 
உப்பை வறுத்து ஒரு துணியில் கட்டி மிதமான சூட்டில் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். 


முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து அதில் சம அளவு பால் சேர்த்துச் சாப்பிட்டால் உள் உறுப்புகளில் உள்ள வீக்கம், முதுகு வலி குணமாகும். 

வன்னி மர இலையை அரைத்து வலி உள்ள இடத்தில் பத்துப் போட்டால் வலி குறையும். 

வாதநாராயணக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூட்டு வலி, இடுப்பு வலி, மற்றும் கழுத்து வலிக்கு நிவாரணம் கிடைக்கும். 

வாதநாராயணக் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும். 

சுக்கு, தனியா, வெந்தயம், வெல்லம், தலா 10 கிராம் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

தினம் ஒரு மூலிகை

🌹தினம் ஒரு மூலிகை🌹

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

🍁திங்கள் – அருகம்புல்☘

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🍁செவ்வாய் – சீரகம்☘

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🍁புதன் – செம்பருத்தி☘

இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். 

🍁வியாழன் – கொத்துமல்லி☘

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🍁வெள்ளி – கேரட்☘

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

🍁சனி – கரும்பு சாறு☘

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

🍁ஞாயிறு – இளநீர்☘

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை  சுத்திகரிக்கும்.

நன்றி. .  சித்தர்கள் நுண்ணறிவு. . 

இயற்கை வைத்தியம் - 50

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்

இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்  முயற்சி செய்து பாருங்கள். பக்க விளைவுகளற்றது.

1. நெஞ்சு சளி 
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி 
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு 
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல் 
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம் 
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். 
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். 
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை 
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி 
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய் 
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு 
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு 
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு 
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம் 
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண் 
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி 
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல் 
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம் 
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும். 
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி 
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம் 
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி 
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண் 
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள் 
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல் 
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம் 
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல் 
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி 
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம் 
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி 
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய 
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண் 
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு 
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி 
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு 
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி 
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு 
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க 
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க 
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம் 
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள் 
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு 
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண் 
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு 
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி 
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு 
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் 
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு 
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு 
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் 
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன் 
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு 
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது. 
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். 
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். 
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். 
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்...

தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய்

♥இரவில் #தொப்புளில் தினமும் ஒரு சொட்டு #எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் #நன்மைகள்!!

♥நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூமீயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

♥அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

♥வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை.

♥அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவீர்களா? தொடர்ந்து படியுங்கள்

#கண்பார்வை :
♥தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது

#பாதவெடிப்பு, #சருமபிரச்சனை :
♥உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

#மூட்டுவலி :
♥முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

#உடல்சோர்வு :
♥உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

#நரம்புபாதிப்புகள் :
♥நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

#தேங்காய்எண்ணெய் :
♥தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

#விளக்கெண்ணெய் :
♥இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

#வேப்பெண்ணெய் :
♥வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

#எலுமிச்சை எண்ணெய் :
♥எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

#பாதாம் எண்ணெய் :
♥சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

#ஆலிவ் எண்ணெய் :
♥தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.