முதுகு மற்றும் இடுப்பு வலிக்கு


உங்கள் வேலை நேரம், வேலையின் தன்மை ஆகியவற்றை கண்காணித்து பேக் பெயின் வருவதற்கான தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளவும். கொஞ்ச நேரம் நடப்பது, சிறிய ஓய்வு என வழக்கத்தை மாற்றிக் கொள்ளவும். உங்கள் டயட் சார்ட்டை செக் பண்ணவும்.  எலும்புகள் வலுப்படுவதற்கான உணவுகள் சேர்க்கவும். வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டில் உள்ள அத்தனை பொறுப்புகளையும் தனது தோள்களில் சுமப்பதற்கு பதிலாக கணவர், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வு கிடைப்பதுடன் பேக் பெயின் வரு வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க லாம். தொப்பை விழாத அளவுக்கு வெயிட்டை மெயின்டெய்ன் செய்வது ரொம்ப முக்கியம். 

சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் வீட்டில் செய்யலாம். நன்றாக நிமிர்ந்து படுக்கவும். படுத்த நிலையில் முட்டியை மடக்காமல் உடலை மேலே தூக்க வேண்டும். படுத்த நிலையில் நிலத்தில் இரண்டு கால்களையும் மடக்கி இடுப்பை மட்டும் மேலே தூக்க வேண்டும். இதே போல் குப்புறப் படுத்த நிலையில் தலையை மேலே தூக்குவது, இடுப்பையும் வயிற்றையும் மேலே தூக்குவது ஆகிய பயிற்சிகள் ஒவ்வொன்றையும் ஐந்து முறை செய்வதன் மூலம் பேக் பெயினால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முடிந்த வரை ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். பேக் பெயின் உள்ளவர்கள் குப்புறப் படுத்து உறங்குவதைத் தவிர்க்கலாம். மல்லாந்து படுப்பதை விட ஒருக்களித்துப் படுப்பதே நல்லது. உடல் என்னும் இயந்திரம் ஒழுங்காக வேலை செய்தால்தான் சந்தோஷச் சிகரங்களில் சறுக்கி விளையாட முடியும். உடலை கவனித்தால் உற்சாகமாய் வலம் வரலாம்.

வீட்டு வைத்தியம்

ஆடாதொடா வேரை கஷாயம் வைத்து குடித்தால் உடல் வலிகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நி வாரணம் கிடைக்கும். 
ஆல மர மொட்டுகளைப் பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும். 
உப்பை வறுத்து ஒரு துணியில் கட்டி மிதமான சூட்டில் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். 


முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து அதில் சம அளவு பால் சேர்த்துச் சாப்பிட்டால் உள் உறுப்புகளில் உள்ள வீக்கம், முதுகு வலி குணமாகும். 

வன்னி மர இலையை அரைத்து வலி உள்ள இடத்தில் பத்துப் போட்டால் வலி குறையும். 

வாதநாராயணக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூட்டு வலி, இடுப்பு வலி, மற்றும் கழுத்து வலிக்கு நிவாரணம் கிடைக்கும். 

வாதநாராயணக் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும். 

சுக்கு, தனியா, வெந்தயம், வெல்லம், தலா 10 கிராம் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.