சனி தோஷத்தின் பாதிப்பை குறைக்கும் சாயாமரம்?


சனி தோஷத்தின் பாதிப்பை குறைக்கும் சாயாமரம்?

Temple images
சனி பெயர்ச்சி மற்றும் தோஷத்தினால் சில ராசிக்காரர்கள் மிகவும் பாதிப்படைந்து இருப்பர். உதாரணமாக, இந்த வருடம் ஜனவரி முதல் மீனராசிக்கு அஷ்டமச்சனியும், துலாம் ராசிக்கு ஜன்மச்சனியும் கடகராசிக்கு அர்த்தாஷ்டமச்சனி (அரை அஷ்டமச்சனி)யும்
நடைபெறுகிறது. இவர்களுக்கு பாதிப்பு குறைய ராமநாதபுரம் பேருந்து நிலையம் எதிரே இருக்கும் வழிவிடும் முருகன் கோவிலுக்குச் செல்வது அவசியமாகும். இத்தலத்தில் கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும். இத்தலத்தில் தான் சனீஸ்வரனின் தாய் சாயாதேவி மரம் வடிவில் அருள்பாலிக்கிறாள். இந்த மரத்தை “சாயாமரம்” என்றே அழைக்கின்றனர். இங்கு வந்து சாயாமரத்தை வழிபடும் பக்தர்களுக்கு சனி தோஷம் உடனே விலகிவிடும். ஏனெனில், சனிபகவான் தனது தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு,தனது கெடுபலன்களைக் குறைத்துக் கொள்வதாக ஐதீகம். இதே வழிபாடு இலங்கை கதிர்காமம் முருகன் கோவிலிலும் இருக்கிறது.