சோழர் கால கணக்கு விநாயகர் பற்றி தெரியுமா?
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் கணக்கு விநாயகர் என்ற விநாயகர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இது ராஜேந்திரசோழனால் உருவாக்கப்பட்டது. தன் அரண்மனை பகுதியில் அமைந்துள்ள இந்த விநாயகரைத் தான் மன்னர் தினமும் வணங்கி வந்துள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டிய காலத்தின் கோபுரம் கட்டிய செலவை சரியாக மந்திரியால் சொல்ல முடியவில்லை. அந்த கணக்கை மந்திரிக்கு இரவோடு இரவாக வந்து சரியாக சொன்னதால் இந்த விநாயகருக்கு கணக்கு விநாயகர் என்று பெயர் வந்ததாக புராணம் கூறுகிறது. இது ஒரு அற்புதமான சிலையாகும். இந்த ஆலயத்தில் விநாயகர், துர்கை, நவகிரகம் உலகம்புகழ் பெற்றவையாகும். | |