ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா சிறப்பு பெறுவது ஏன் தெரியுமா?

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா சிறப்பு பெறுவது ஏன் தெரியுமா?


Temple images
ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றாலே பால்கோவாதான் நினைவிற்கு வரும். பசுமாடுகள் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் இங்கு அதிகளவில் பால்கோவா போன்ற பால்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பாவையில், "குடம் வைக்க வைக்க 
பால் நிறையும் அளவிற்கு கறவைகள் (பசுக்கள்) அதிகமாக வாழும் பகுதி என்று பொருள்படும்படியாக ஆண்டாள் பாடியிருக்கிறாள். அவள் இத்தலத்தை கோகுலமாகவே எண்ணி வாழ்ந்ததால் பெருமாள், இப்பகுதியை பசுக்கள் நிறைந்த பகுதியாக மாற்றி அருளினார். இன்றும் இங்கு பசுக்கள் சுரக்கும் பாலிற்கு தனி சுவை இருக்கிறது. எனவே பால்கோவாவும் புகழ் பெற்று விட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்- பெயர் விளக்கம்:ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்திற்குரிய விளக்கத்தைக் கேளுங்கள்.ஸ்ரீ என்றால் லட்சுமி. இவளே ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள். வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னன் பெயர். பாம்பு புற்று நிறைந்திருந்த பகுதியாக இருந்தது என்பதால் "புத்தூர் என்றும் பெயர் வந்தது. பிற்காலத்தில், இவற்றை மொத்தமாகத் தொகுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் என பெயர் பெற்றது.