மொட்டை போடுவதன் காரணம்-

🔱🚩
                                                               உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.

இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.

பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.

குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.

ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும் முடி எடுத்துக்கொள்வார்கள். அது தவறாகும்.

ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.

இதனை ஹிந்துக்களிலேயே கிண்டலடிப்பவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?'  என்றும் ,

'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் கேலி பேசுவார்கள்.

முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?'  என்று கிண்டலடிப்பார்கள்.

யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும்.

மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும்.

இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.

மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .

அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான்  அஸ்வத்தாமன்.

குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன்.

அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார்.

அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.

ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு ,

நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.

ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.

ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு.

பழங்களின் ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள்!

பழங்களின் ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள்!

Temple images
இறைவழிபாட்டில்  பழ வகைகளும் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக மா, பலா, வாழை போன்ற கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுகிறோம். புராதன காலம் முதலாக முனிவர், ரிஷிகள் சமைத்த உணவைத் துறந்து பெரும்பாலும்
 பால், பழம், ஆகியவற்றை உண்டார்கள். இதனால் நீண்ட காலம் திடகாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள். இதை புராண இதிகாசக் கதைகளும் எடுத்து கூறியுள்ளன. நாரதர் கொடுத்த மாங்கனிக்காக விநாயகரும் முருகனும் போட்டியிட்ட கதையை நாம் அறிவோம், அதேபோல் அதியமான் கொடுத்த நெல்லிக்கனியை உண்டதால் அவ்வைப் பிராட்டி நீண்டகாலம் வாழ்ந்த வரலாறும் உண்டு. பழங்களில் உள்ள சத்துக்கள் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இத்தகைய காரணங்களினால் இறைவழிபாட்டில் பழங்கள் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.

பழங்களின் மருத்துவ குணங்கள்:
 ஆப்பிள் வயிற்றுப்போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், இதய நோய்கள் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் பழம் நீரிழிவை நீக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும். திராட்சை ஒரு வயது குழந்தையின் மலக்கட்டு, சளி ஆகியவற்றை நீக்கும். காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் கொடுத்து வந்தால் நீங்கும். கொய்யாப்பழத்தால் உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படும். சிவப்பு திராட்சை, தோல் வியாதியை போக்கும். திராட்சை, ஆப்பிள், எலுமிச்சை - மலச்சிக்கலைப் போக்கும். பப்பாளி, ஆரஞ்சு - மூல வியாதிக்காரர்களுக்கு நல்ல பயன் தரும். திராட்சை, சாத்துக்குடி - ரத்த அழுத்தத்திற்கு நல்லது.

சூரிய பூஜையின் சிறப்பும் அவசியமும்!

சூரிய பூஜையின் சிறப்பும் அவசியமும்!

Temple images
லட்சக்கணக்கான ஆலயங்கள் இருந்தாலும், சில நூறு பெரிய ஆலயங்களில், கருவறையிலுள்ள இறைத்திருவுருவின் மீது, சூரிய ஒளி படரும் அமைப்புடையவற்றை சூரிய பூஜைக் கோயில் என்று நம் முன்னோர்கள் போற்றி வந்திருக்கின்றனர். 
ஊர்தோறும், தெருதோறும் உள்ள 
கூரையே இல்லாத மேடைக் கோயில்களிலும் கருவறை மட்டுமே உடைய பல்லாயிரம் சிறிய கோயில்களிலும், அன்றாடம், இறைவடிவின் மேல் பல மணி நேரம் சூரிய ஒளி படுகின்றதை சிறப்பு அம்சமாகக் கருதாத போது, எப்போதாவது சில நாட்கள் மட்டுமே கருவறையில் சூரிய ஒளி பரவும் கோயில்களை பெருமையாகப் பேசுவது ஏன்? பல முன் மண்டபங்களைத் தாண்டிக் கருவறையில் சூரிய ஒளி படர்வது ஒரு பொறியியல் சாதனை மட்டுமா?

எல்லா மண்டபங்களையும் தாண்டி கருவறையில் கதிரவனின் ஒளி படருமாறு அமைப்பது ஏன்? நாம் உணராவிட்டாலும் கூட, காற்று ஓட்டம், காந்த சக்தி நகர்வு, ஒளிச் சிதறல், ஒலிப்பரவல் போன்ற பல இயற்கைச் சக்திகளின் இயக்கத்திற்கு நாம் ஒவ்வொரு நொடியும் ஆளாகிக் கொண்டேயிருக்கிறோம். குடிசையாயினும், மாளிகையாயினும், பலமாடிக்குடியிருப்பு ஆயினும், பொருள் கிடங்காயினும், பெரும் ஆலயங்களாயினும், சிறு பந்தலாயினும் சரி, நாம் உருவாக்கும் ஒவ்வொரு அமைப்பும் மேற்கண்ட இயற்கைச் சக்திகளின் நகர்வில் குறுக்கிடுகின்றன. இக்குறுக்கீட்டினால் நமக்கு தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, தீவிர ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டவையே வாஸ்து சாஸ்திரம்.

வாஸ்து நியதிகள் எல்லா கட்டமைப்புக்கும் உண்டு. ஆலயங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில், ஆலயங்கள் கட்டுமானத்திற்குத் தான் வாஸ்து விதிகள் அதிகம். அதிலும், ஆலய வளாகம் பெரிதாகப் பெரிதாக நியதிகளும் அதிகமாகின்றன. கருவறையில் சூரிய ஒளி படர வழி வகுப்பதும், கருவறையைச் சுற்றி மண்டபங்கள் எழுப்பும்போது வெளிச்சமும், வெய்யிலும், காற்றும் உள்ளே பரவிடுதற்காக, மேல் விதானத்தில் ஆகாயம் தெரியுமாறு, பிரம்மவெளி என்று அழைக்கப்படும் ஜன்னல்கள் வைப்பது முக்கிய நியதிகளாகும். இயற்கைச் சக்தியோடு நமக்கு தடையற்ற தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, இன்றும் பல ஊர்களில் பெரிய வீடுகளில் திறந்த வெளி முற்றங்கள் அமைக்கப்படுகின்றன. வீட்டு அறைகளில் இயற்கைச் சக்திகளின் இயல்பான ஓட்டம் தடைப்படுவது அதிகரிக்க அதிகரிக்க, நாம் செயற்கையாக, வெளிச்சத்துக்கு விளக்கும், காற்றுக்காக காற்றாடியும் உபயோகிக்கிறோம். பலமாடிக் குடியிருப்புக்களில் வீட்டிலுள்ள சமையல் வாடையும், கழிவறை நாற்றமும் வெளியேறிட காற்று வெளித்தள்ளியும் வைக்கிறோம். இது போன்ற ஒரு செயல்பாடே, ஆலயக்கருவறையில் சூரிய ஒளி படரச் செய்திடுவதும் ஆகும்.

அன்றாடம் இயலாவிட்டாலும், நாம் வருடாவருடம், எப்போதாவது அருவியிலும், ஆற்றிலும், கடலிலும் நீராடி ஆரோக்கியம் பராமரிப்பது போல, பல்லோரும் கூடிடும் ஆலயங்களிலும், அசுத்த நிலையை நீக்கி தூய்ப்பிக்கும் முயற்சியே மிக நுணுக்கமான, அளப்பரிய சக்தி வாய்ந்த சூரிய ஒளியை பரவச் செய்யும் ஆலய இயல் நியதியும் ஆகும். மூர்த்திக்கு எதிரே நின்று அர்ச்சகர் பூஜிக்கலாகாது என்றும், பக்தர்கள் வழிபடலாகாது என்றும் கூறுவதற்குக் காரணம், பின் இருப்பவர்க்கு இறைவனைக் காண முடியாது என்பது மட்டுமல்ல. கருவறைக்கும் பிற மண்டபங்களுக்கும் இடையிலான ஒளி, ஒலி, காற்றுப் பரவல் தடைப்படக்கூடாது என்பதுவே மிக முக்கியகாரணம்.

சூரிய ஒளி பரவல் அமைப்பு உள்ள கோயில்கள் பல இருந்தாலும், தமிழகத்தில் தான் அவை அதிகம் உள்ளன. தமிழகத்திலுள்ள சுமார் 100 சூரிய பூஜைக் கோயில்களில் மிகச் சிலவற்றில் மட்டுமே (கண்டியூர், சங்கரன் கோயில் போல) ஒளிப்பரவல் மாலையில் ஏற்படுகிறது. மற்றவற்றில் காலையில் தான். பலவற்றில் சூரிய பூஜை அமைப்புடைமை பொது மக்களுக்குத் தெரியாமலேயே உள்ளது. பஞ்சாங்கங்களில் கூட சிலவைப் பற்றி மட்டுமே குறிப்பு உள்ளது.

ஒளிப்பரவல் நேரத்தில் பல்லோரும் கூடி இறைநாமம் ஜபிக்கும்போது நல்ஒலி அதிர்வுகளும் சேருவதால் ஆலயம் புதுப்பொலிவும், ஈர்ப்பும் பெற்று நாம் அடையும் பயனும் பன்மடங்காகிறது. அடிக்கடி ஆலயம் செல்ல முடியாவிட்டாலும், சூரிய பூஜை நேரத்திலாவது இறைவனை கண்டிப்பாக தரிசிக்க முயல்வோம்.

சிவாலயங்களில் தரிசனம் செய்து விட்டு உட்கார்ந்து வர வேண்டும் என்பது ஏன்?

சிவாலயங்களில் தரிசனம் செய்து விட்டு உட்கார்ந்து வர வேண்டும் என்பது ஏன்?

Temple images
நாம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்கிறோம். திரும்பி வரும் போது ஆலயத்தில் சற்று நேரம் அமர்ந்து விட்டு வருகிறோம். ஏன்? சிவாலயங்களில் மட்டுமே அவ்வாறு அமர்ந்து விட்டுவர வேண்டும் என்ற காரணம் தெரியுமா. நம்மைப் பின்தொடர்ந்து 
சிவனுடைய பூதகணங்கள் 
நம் வீட்டிற்கு வந்து விடக்கூடாது. மேலும் சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதனால் சிவன் கோயில் தூசு கூட நம்மேல் ஒட்டக் கூடாது என்பதும் ஒரு கருத்து. அதுபோல் விஷ்ணு கோயிலில்களில் தரிசனம் செய்த பிறகு அமர்ந்து விட்டு வரக் கூடாது. ஏனென்றால் அப்போது தான் லட்சுமி நம்முடன் வீட்டிற்கு வருவாள். அதிர்ஷ்டம் பொங்கும் என்பது ஒரு கருத்து.

கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Temple images
கண்ணன் கடவுள்தானே அவன் நினைத்தால் பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெய்யைத் திருடித் தின்ன வேண்டும்? பாலைத் தண்ணீரில் 
விட்டால் தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெய்யோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். ஆகவேதான் அவர் பாலைத் திருடாமல் வெண்ணெய்யைத் திருடினார்? வெண்ணெய் என்பது மோரிலிருந்து கடைந்தெடுக்கப்படுவது. அதாவது அதுதான் பாலின் சாராம்சம். இந்த உலகம் நிரந்தரமானதல்ல, வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை உணர்ந்து, இந்த உலக வாழ்க்கையில் ஒட்டாமல் வெண்ணெய்யைப் போலிருந்தால் கிருஷ்ணர் அப்படிப்பட்டவர்களைத் திருடிச் செல்வார். இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணுபவர் தண்ணீரில் கலந்த பாலாக இருக்கின்றனர்.

வெண்ணெய்யைப் போன்று எப்படி உலகத்தோடு ஒட்டாமல் வாழ்வது? ஒரு வாத்து தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. உப்புத் தண்ணீரில் மீன் வாழ்ந்தாலும், உப்பு அதன் உடம்பிற்குள் சேர்வதில்லை. தாமரை தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் இலையின் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதேபோல ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அதாவது இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியங்களுடன் வாழ வேண்டும். ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்.

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை!

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை!

Temple images
வாழ்க்கை ஒரு சவால்-----அதனை சந்தியுங்கள்

வாழ்க்கை ஒரு பரிசு-----அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகச பயணம்-----அதனை மேற்கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சோகம்-----அதனை கடந்து வாருங்கள்

வாழ்க்கை ஒரு துயரம்-----அதனை தாங்கிக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு கடமை-----அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம்-----அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல்-----அதனை பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்-----அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு பயணம்-----அதனை முடித்துவிடுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதிமொழி -----அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு காதல்-----அதனை அனுபவியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு-----அதனை ஆராதியுங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு-----அதனை உணர்ந்துகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு போராட்டம்-----அதனை எதிர்கொள்ளுங்கள்

வாழ்ககை ஒரு குழப்பம்-----அதற்கு விடை காணுங்கள்

வாழ்க்கை ஒரு இலக்கு-----அதனை எட்டிப் பிடியுங்கள்.

சிவன் கோயில்களில் பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

சிவன் கோயில்களில் பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!


Temple images
நமது நாட்டின் சுதந்திர தினம் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. அன்று சுதந்திர தினம், மாத சிவராத்திரி, பிரதோஷம் மூன்றும் ஒரே நாளில் வருவது தனி சிறப்பாகும். மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது. பிரதோஷம் அன்று 
சிவன் கோயில்களில் எந்தெந்த தெய்ங்களை எப்படி வலம் வந்து வணங்கி பலன் பெறுவது என்பது பற்றி பார்ப்போமே!. சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும். தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலில் உள்ள அமிர்தத்தை பெற வேண்டி "வடவரை என்னும் மந்திர மலையை மத்தாகவும், "வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் வைத்து திருப்பாற்கடலை கடைந்தனர். இந்நிகழ்ச்சியை சிலப்பதிகாரமும், ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் ""வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி பண்டொரு நாள் கடல் வயறு கலக்கினையே என கூறுகிறது.
தேவர்களும், அசுரர்களும் திருபாற்கடலை கடைய துவங்கியதும் வேதனை தாளாத வாசுகி நாகம் விஷத்தை கக்கியதால் வெளியே வந்த ஆலகால விஷம் தேவர்கள், அசுரர்களை நெருங்க அதன் வெப்பம் தாங்காத அனைவரும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர். சிவபெருமான் சக்தியுடன் நந்தி பகவானின் இரண்டு கொண்டுகளில் நடுவே பிரன்னமாகி எங்கும் பரவியிருந்த விஷத்தை உளுந்து அளவாக்கி அனைவரையும் காப்பாற்றுவதற்காக ஆலகால விஷத்தை தான் உண்டார். அதுகண்டு பயந்து நின்ற பார்வதிதேவியும் இறைவனுக்கு விஷத்தால் ஏதும் இன்னல்கள் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி சிவபெருமானது கண்டத்தில் (கழுத்தில்) தன் கையை வைத்து அவ்விஷத்தை கழுத்திலேயே நிலைத்திருக்க செய்தார். இதனால் ஆலகால விஷம் சிவபெருமானின் கழுத்து பகுதியிலேயே தேங்கி நின்று நீலகண்டம் ஆயிற்று. நஞ்சுண்டு இருந்ததால் நஞ்சுண்டவன் என சிவன் அழைக்கப்படுகிறார். ""பெயர்தக்க நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என வள்ளுவர் குறிப்பிட்டது போல நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை "பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால், நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வரவேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும். நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவது "சோமசூத்திர பிரதட்சணம் என்று கூறப்படுகிறது. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு "ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கோடி கிட்டும்.

ஒருவன் குற்றவாளியாக காரணம் என்ன?

ஒருவன் குற்றவாளியாக காரணம் என்ன?


Temple images
ஒருமுறை காளிங்கன் என்ற நாகம் யமுனை நதியை விஷமயமாக்கியது. அதில் குளிக்க வந்த பசுக்களையும், அவற்றை மேய்ப்பவர்களையும் சாகடித்தது. இதைக் கண்ட மற்ற மேய்ப்பர்கள் பகவான் கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டனர். கிருஷ்ணர் 
யமுனை நதிக்கரைக்கு வந்து. 
காளிங்கனிடம் சண்டைக்கு வருகிறாயா என்று சவால்விட்டார். பயங்கரமான சண்டைக்குப் பிறகு காளிங்கன் தோற்றது. பணிந்து போயிற்று! வெற்றி பெற்ற கிருஷ்ணர். காளிங்கனின் தலைமீது ஏறி நின்று வெற்றி நடனம் ஆடினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த பசுக்களும், மேய்ப்பர்களும் அவரை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தார்கள். தோற்றுப்போன காளிங்கன் யமுனை நதியை விட்டே வெளியேறுகிறது. இனி யாரும் யமுனை நதியை விஷமிட்டு நாசப்படுத்த முடியாது என்று மகிழ்ந்தார்கள் மக்கள்.

இந்தப் புராணக் கதையினுள் இன்னொரு கதையும் இருக்கிறது. இந்தக் கதையின்படி, விஷமுள்ள நாகமான காளிங்கனை அழிக்க வந்த கிருஷ்ணர் உன் விஷம் யமுனை நதியைப் பாழாக்குகிறது. மாடுகளும் மாடு மேய்ப்பவர்களும் இறக்கவேண்டி வருகிறது. அதனால் நீ இந்த நதியை விட்டுப் போய்விடு! என்றார் அதற்குக் காளிங்கன் மறுத்துவிட்டது. ஏன் இங்கிருந்து போக மறுக்கிறாய்? என்று கிருஷ்ணர் கேட்க, இதுதான் எனக்குப் பாதுகாப்பான இடம். நதியின் இந்த வளைவுப் பகுதியை விட்டு நான் போய்விட்டால், என்னை கருடன் எளிதாக வந்து தாக்குவான். அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு நீரை விஷமாக்குவதில் விருப்பமில்லை. ஆனால், அதற்கு நான் என்ன செய்வது? எங்கே போவது? என்றது.

முதல் கதையில் காளிங்கன் வில்லன். இரண்டாவதில், காளிங்கன் பாதிக்கப்பட்டவன். இரண்டாவது கதை நம்மைக் கருணையோடும் அன்போடும் கவனிக்கச் சொல்கிறது. எல்லாக் கதைகளிலும் ஹீரோவும் உண்டு. வில்லனும் உண்டு. ஆனால் வில்லன் ஏன் உருவாகிறான் என்பது குறித்து நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. யாருமே பிறந்தவுடன் குற்றவாளி ஆகிவிடுவதில்லை. தேவைதான் ஒருவனைக் குற்றவாளி ஆக்குகிறது. பேராசைக்கு இடம் கொடுக்கிறது. இதை நாம் உணர்வதற்குள், அது நமக்குப் பழகிப் போய்விடுகிறது. இருந்தாலும் பாதிக்கப்பட்டவனுக்குள் வில்லத்தனம் விதைக்கப்பட்டு விடுகிறது என்பதால் கடுமையாக இருக்கின்றன என்பதால், நாம் அவற்றை மீறப் பார்க்கிறோம். அப்படி மீறுவதால், நாம் எதையும் செய்யலாம் என்ற விடுதலை உணர்வை அனுபவிக்கிறோம். விதிகள் நம்மைப் பாதுகாப்பற்றதாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கும்போது, நாம் சட்டத்தை மீறுகிறவர்கள் ஆகிறோம். குற்றவாளிகள் ஆகிறோம்!

நாகமான காளிங்கனுக்கு கருடன்மீது பயம் இருந்தது. கருடனால் தனது உயிருக்கு தீங்கு ஏற்படுமோ என்று அது அஞ்சியது. அதனால் இருக்கிற இடத்திலேயே.... அதாவது யமுனை நதியிலேயே இருக்க கிருஷ்ணரிடம் அனுமதி வேண்டியது. நதியில் இருந்து வெளியேற அதற்கு தைரியம் வரவில்லை. அதே நேரம், காளிங்க நாகமானது தனது விஷத்தன்மையால் நதியையே விஷமாக்கிறது. அதன்மூலம் அது வில்லனாகவும் மாறியது! கிருஷ்ணர் இதை உணர்ந்தார். அதனால்தான் தன் திருப் பாதத்தின் சுவடுகளை காளிங்கனின் தலை மீது பதித்தார். அதுதான் நாகப்பாம்பின் மீது காணப்படும் நாமம் போன்ற அடையாளம். காளிங்கனாகிய என்னை எதுவும் செய்துவிடாதே... என்று அந்த நாகம் கருடனிடம் தெரிவிப்பதற்காக கிருஷ்ணர் தந்த அடையாளமாகவும் நாம் அதை எடுத்துக்கொள்ளலாம்.

இந்துப் புராணங்களில் கடவுள் சாதாரணமாக வில்லனைக் கொல்வதில்லை. மாறாக அவனுக்கு விமோசனம் அளிக்கிறார். விடுதலை மாதிரிதான் அது. பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் (வில்லன் உட்பட) காப்பாற்றப்பட வேண்டியவர்தான். அதைத்தான் இரண்டாவது கதை சொல்கிறது. இன்றைக்குத் தப்பு செய்கிறவர்கள் பலரையும் நாம் வில்லனாகப் பார்க்கிறோம்; அடிக்கிறோம், உதைக்கிறோம், அபராதம் வாங்குகிறோம்; தண்டனை கொடுக்கிறோம்; சிறையில் தள்ளுகிறோம். இப்படி, அவர்களுக்குத் தண்டனை மட்டும் கொடுத்தால் போதாது; அதனுடன் அவர்களுக்கு விமோசனம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். நமக்குள் எழும் சினத்தையும் ஆத்திரத்தையும் காட்டுவதைவிட, பக்குவ நிலையில் யோசித்துப் பார்க்க வேண்டும். பக்குவ நிலை வராவிட்டாலும், அதைப்பெற முயற்சியாவது செய்ய வேண்டும். அதுதான் ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் அழகு!

வாராஹி அம்மனை வழிபடுவது எப்படி?

வாராஹி அம்மனை வழிபடுவது எப்படி?

Temple images
ஒவ்வொருவரும் அம்பிகையைப் பூஜை செய்வது பூர்வ புண்ணிய பலத்தினால் வருவது. எதிலும் சக்தியே பிரகாசிக்கிறது. அந்த சக்தியை ஒரு இடத்தில் நிறுத்தி அதனுடைய பேரருளை பக்தி மார்க்கமாக வாராஹி அம்பாள் என்று நினைவில் வைத்து 
அம்பாளை லயம் செய்து கொள்வதே
 உபாசனை என்பதாகும். அவ்வாறு தாங்கள் வாராஹியை உபாசித்தால் சகலவிதமான காரியங்களும் நொடியில் சித்தியாகும். ஆதிசக்தியாகிய பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக வாராஹி தேவி அவதரித்தாள். ஆகையால் நாம் வாராஹியை அன்றாடம் வழிபாடு செய்ய வேண்டும். 

குறிப்பு :

1. வாராஹிக்கு ஏற்ற மாலை - செவ்வரளி மாலை.
2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் - செந்தாமரை, வெண் தாமரை.
3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு - தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, பனங்கிழங்கு.
4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் - மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.
5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் - வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரி வேர்.
6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.
7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் - கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை இத்துடன் பானகம் முதலியன.


வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் :

1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.
2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.
3. புலி வாகன வாராஹி.
4. வெண் குதிரை வாகன வாராஹி.

இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஜபத்திற்கான மந்திரங்கள்

மந்திரங்கள் சப்த ரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் ஸூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாஸனை, ஜபத்தினால்தான் வலிமை பெறும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம்.

ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.
உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.

2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.

3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.

ஜபத்திற்குரிய இடங்கள்

ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.

பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.

சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.

கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்! ஐம் க்லௌம்
ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி

வாராஹி, வாராஹி வராஹமுகி, வராஹமுகி
அந்தே அந்தினி நம:

ருந்தே ருந்தினி நம :
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம்
ஸ்ர்வேஷாம் ஸ்ர்வவாக்

சித்த, சக்ஷர் முககதி
ஜிக்வா, ஸ்தம்பனம் குருகுரு


சீக்ரம் வஸ்யம்

ஐம் - க்லௌம் - ட : ட : ட : ட
ஹும் அஸ்த்ராய பட்

ஓம் அஸ்யஸ்ரீ வாராஹி
மஹா மந்த்ரஸ்ய பகவான்
பைரவ ரிஷித் ருஷ்டிப் ஸந்தவராகி
மஹா சக்தி தேவதா
க்லைம் பீஜம்
க்லாம் சக்தி
க்லூம் கீலகம்
மம ஸ்ரீ வாராஹி
மஹா சக்தி பிரசன்ன
ஸித்தியர்த்தே ஜெபோ விநியோக ஹா!


நியாஸம் :
கரம் :
ஐம் - அங்குஷ் டாப்யாம் நம:
க்லிம் - தர்ஜ்ஜனிப்யாம் நம:
சௌ - மத்யமாப்யாம் நம:
ஐம் - அனாமி காப்யாம் நம:
க்லீம் - கனிஷ்ட காப்யாம் நம:
சௌ - கரதலப்ருஷ்டாப்யாம் நம:

நியாஸம் :
அங்கம் :
ஐம் ஹ்ருதயாக நமஹ
க்லீம் சிரசே ஸ்வாஹ
சௌம் சிகாயை வஷட்
ஐம் கவசாய ஹும்
க்லீம் நேத்ராய வெளஷட்
சௌம் அஸ்திராயபட்
பூர்ப்பு வஸ்ஸுவரோம் இதி திக்பந்த :

அஸ்ய ஸ்ரீ மஹா வாராஹி ! மஹா
மந்திரஸ்ய ! தரணீ
வாராஹ ருஷி ! ப்ரஹதீ சந்த்; மஹா
வாராஹி தேவதா !!

த்லௌம் பீஜம் ! ஐம் சக்தி !
ஹ்ரீம் கீலகம் ! ஸ்ரீ மஹா வாராஹி
ப்ரஸாத ஸித்தியர்த்தே ஜப விநியோக

தியானம் :
வந்தே வராஹவக்த்ராம் மணிமகுடாம்
வித்ரும ச்ரோத்ர பூஷாம்
ஹாரக்ரை வேய துங்கஸ்தனபர நமதாம்
பீத கௌசேய வஸ்த்ராம்
தேவீம் த்÷க்ஷõர்த்வ ஹங்தே முஸலமத்
வரம் லாங்கலம் வா கபாலம்
வாமாப்யாம் தாரயதீ குவலய கலிதாம்
ச்யாமளாம் ; சுப்ரனை !!
லம் இத்யாதி பஞ்சபூஜா

தியானம் :
அஸ்ய ஸ்ரீ மஹா வாராஹி மந்தரஸ்ய
தரணி வாராஹ ரிஷி : ப்ரஹதீ சந்தாம்ஸி
மஹா வாராஹி தேவதா
மமகார்ய சித்யர்த்தே வாராஹி தேவி வந்த
ஜெப சித்யர்த்தே மமகுல சந்தோஷணார்த்தே
ஜெபே விநியோகக


ஸ்ரீ அஸ்வாரூடாம்பா மகா மந்திரம்

ஓம் அஸ்ய ஸ்ரீ அஸ்வாரூடாம்பா மகா
ஸ்வச் சந்த பைரவ ருஷி காயத்ரீ மந்திரஸ்ய சந்த:
ஸ்ரீ அஸ்வாரூடாம்பா தேவதா!
ஆம் பீஜம் ஹ்ரீம்சக்தி க்ரோம் கீலகம்
மமஸ்ரீ அஸ்வாரூடாம்பா பிரசாத சித்யர்த்தே
அஸ்வாரூடாம்பா மந்த்ர ஜெப விநியோக
ஆம் - அங்; ஹ்ரீம் - த; க்ரோம் - ம
ஏஹி - அனா - பரமேஸ்வரி - கனி ஸ்வாஹா
கர தலகிர நம
ஏவம் க்ருதயன்யாச :

தியானம்
அஸ்வாரூடாம் காராக்ரைர் நவ கனக மயீம்
வேத்ர யஷ்டிம் ததானம்
தக்ஷன்யே நா நாயந்கீம் பக்த நூலதாம்
பாராபத்தம் சுசாத்யம்
தேவீம் நித்ய பிரசன்னாம் சசி சகலதராம் தாம்
த்ரிநேத்ரா பிராமாம்
உத்யத் கவ்யாம் சபத்யாம் சகல சுப
பலப்பிராப்தி
(க்ருத்சாம் ஸ்ரீ யன் நம:)

மந்திரம் :
ஆம் - ஹ்ரீம் - க்ரோம் ஏஹி
பரமேஸ்வரி ஸ்வாஹா


ஸ்ரீ வாராஹி அஷ்டகம்

தேவி க்ரோடமுகி ந்வதங்ரி கமலத்வத்
த்வானு ரக்தாத்மனே
மஹ்மம் த்ருஹயதயோ மஹேசி மனஸா
காயேன வாசா நர ;
தஸ்யாசு த்வதயோக்ர நிஷ்டுரஹலா
கதா ப்ரபூதவ்யதா
பர்யஸ்யன் மனஸோ பவந்து வபுஷ ;
ப்ராணா ப்ராயாணோன் முகா
தேவி த்வத்பத பத்ம பக்தி விபவ ப்ரஷீனே
துஷ்கர்மணி
ப்ராதுர்பூத ந்ருசபர்ஸ பாவமலினாம்
வ்ருத்திம் விதத்தே மயி

யோ தேஹி புவணேத தீய ஹ்ருதாயாந்
நிர்கத்வரைர் லோஹிதை
ஸத்ய; பூரயஸே கராப்ஐ சஷகம்
வாஞசாபலைர் மாமயி
சண்டோத்துண்ட விதீர்ண துஷ்ட ஹ்ருதய
ப்ரோத்பின்ன ரக்தச்சுடா
ஹாலாபான மதாட்ட ஹாஸநித
தா கோப ப்ரதா போந் கடே,
மாதர் மத் பரிபந்தினா மபஹ்ருதை ;
ப்ரானண ஸத் வதங்ரித்வயம்
த்யானோட்டாமர வைபவோதய வசாத்
ஸந்தர்ப்பயாமி க்ஷணா ;
ச்யாமாம் தாமரஸானனாங்ரி நயனாம்
ஸோமார்த்த ஷடாம் ஜகத்
த்ராண வ்யக்ர ஹலாயு தோக்ர முஸலாம்
ஸந்த்ராஸ முத்ராவதீம்

யேத்வாம் ரக்த கபாலினீம் ஹரவராரோ
ஹேவரா ஹானனாம்
பாவை; ஸந்தத்தே சதப் க்ஷணம்பி
ப்ராணாந்தி தேஷம் த்விஷ
விஸ்வாஸ்தீஸ்வர வல்லபே ஜெயஸேயா
த்வம் நித்யந்த்ரி யாத்மிகா
பூதானாம் புருஷாயு ÷ஷாவதிகரீ
பகா ப்ரதா கர்மணாம்
தர்மயாசே பவதீம் கிமப்யவிதகம்
யோமத் விரோ நீஜன ;
தஸ்யாயர்ம வாஞ் சிதாவதி பவேத்
மாதஸ்தவை வாக்ஞயா
மாதஸ்ஸம்யகு பாஸிதும் ஜடமதி ஸ்திவாம்
நைவ சக்னோம் யஹம்
யத்யப்யன் வித தேசிகாங்ரி கமலானுக் ரோச
பாத் ஸங்கின ;

வாராஹி வ்யத்மான மானஸ களத்
ஸெனக்யம் ஹதாசாபலம்
ஸிதத்தம் தமபாக்ரு தாத்ய வஸிதம் ப்ராப்தா
கிலோத் பாதகம்
கிரந்தத் பந்துஜனம் களங்கித குலம் கண்ட
வரணோத்யத் க்ரியிம்
பச்யாமி ப்ரதிக்ஷமா பதிதம் ப்ராந்தம்
லுடந்தம் முஹு
வாராஹி த்வம்சேஷ ஜந்து ஹீபுன ;
ப்ராணாத்மிகா ஸ்பந்தஸே
சக்திவ்யாபத சராசர கலுய தஸ்த்வாமேத
தப்யர்த்தயே
த்வத பாதாம்புஜ ஸங்கினோமம ஸக்ருத்
பாபம சிகீர் ஷத்தியே
தோஷாம் மாகுரு சங்கரப் பிரியதமே
தேஹாந்தரா வஸ்திதம்


ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம்

தேவ்யுவாச :
1. நமோஸ்து தேவி வாராஹி ஐயைகாரஸ்வரூபிணி !
ஜபித்வா பூமிரூபேண நமோ பகவதிப்பரியே!!

2. ஜயக்ரோ டாஸ்து வாராஹி தேவித் வாம்ச நமாம்யஹம்!
ஜய வாராஹிவிஷ் வேஸிமுக்ய வாராஹிதே நம!!

3. ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாநாம் வாக் ஸ்தம்ப நகரீநம!
நமஸ் ஸ்தம்பிநி ஸ்தம்பே தவாம் ஜ்ரும்பே ஜரும்பிணி தே நம!!

4. முக்யவாரா ஹிவந்தே த்வாம் அந்தே அந்திநி தே நம!
ருந்தே ருந்தேநிவந்தே த்வாம் நமோ தேவீது மோஹி நீ !!

5. ஸ்வபக்தானாம் ஹி ஸர்வேஷாம் ஸர்வகாம ப்ரதே நம!
பாஹ்வோ ஸ்தம்பகரீம் வந்தே சித்தஸ் தம்பிந தே நம!!

6. சக்ஷúஸ் ஸ்தம்பிநி த்வாம் முக்யஸ்தம்பி தே நமோ நம
ஜகத்ஸ்தம்பிநி வந்தே த்வாம் ஜீஹ்வாஸ்தம்பந காரிணி

7. ஸ்தம்பனம் குரு ஸத்ரூணாம் குரு மே ஸத்ருநாஷநம்
ஸீக்ரம் வஸ்யம் ச குரு யோக்நௌ வாசாத்மகேநம

8. டசதுஷ்டயரூபே த்வாம் ஸரணம் ஸர்வதா பஜே
ஹோமாத்ம மகே பட்ரூபேண ஜய ஆத்யாநநேஸிவே

9. தேஹி மே ஸகலான் காமான் வாராஹீ ஜெகதீஸ்வரி
நமஸ்துப்யம், நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம

10. இதம் ஆத்யாநநா ஸ்தோத்ரம் ஸர்வ பாபவிநாஸநம்
படேத்ய ஸர்வதா பக்த்யா பாத கைர் முச்யதே ததா

11. லபந்தே ச ஸத்ரவோ நாஸம் து ; கரோகாபம்ருத்யவ
மஹதாயுஷ்யமாப் நோதி அல க்ஷ் மீர் நாஸமாப்நுயாத்

12. ந பயம் வித்ய தே க்வாபி ஸ்ர்வதா விஜயோ பவேத்
அபீஷ்டார்தான் லபேத் ஸர்வான் ஸரீரீ நாத்ர ஸம்ஸய

(இதி ஸ்ரீருத்ர யாமளே உமா மஹேஸ்வர ஸம்வாதே
ஆதிவாராஹீ ஸ்தோத்ரம் ஸமாப்தம்)

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?


Temple images
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, 
விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.

திருமணத்தில் தாலிகட்டும் போது கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

திருமணத்தில் தாலிகட்டும் போது கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?


Temple images
திருமணத்தின் போது தாலி கட்டுவது தான் முத்தாய்ப்பான நிகழ்ச்சி. அந்நேரத்தில் பலரும் பல விஷயங்களை அளந்து கொண்டிருப்பார்கள். அதில் கெட்டதும் இருக்கலாம். அந்த சப்தத்தையெல்லாம் அடக்கும் வகையில்,
 சப்தமாக மேளம் வாசிக்கும்போது, கவனம் மணமேடை பக்கம் திரும்பி விடும். அப்போது அட்சதை தூவி மணமக்களுக்கு ஆசியளிக்க வேண்டும் என்பதற்காக கெட்டிமேளம் முழக்கப்படுகிறது.

சடாரியில் திருமுடியின் மேல் திருவடி ஏன்?

சடாரியில் திருமுடியின் மேல் திருவடி ஏன்?

Temple images
அது புனிதமான கங்கைக்கரை. மரவுரி தரித்து தவக்கோலத்தில் வீற்றிருக்கிறான் ஸ்ரீராமன். அருகில் அன்புத் தம்பி லட்சுமணனும், பதியை விட்டுப் பிரிய மனமில்லாமல், மரவுரி தரித்து உடன் வந்த மனைவி ஜானகியும் பணிபுரிந்து நிற்கின்றனர். 
பாசத்தால் ஸ்ரீராமனைப் பரவசப்படுத்திய கங்கை வேடன் குகனும், அவன் பரிவாரமும் புடைசூழ்ந்து நிற்கின்றனர். துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகக் கருதும் ஸ்ரீராமனின் நிர்மலமான உள்ளத்தைக்கூட அப்போது உலுக்கியது, அவனது காலடியில் விழுந்து கதறி அழும் தம்பி பரதனின் கண்ணீர். தனக்கு இல்லையென்று ஆகிவிட்ட ராஜ்யத்தைதான் துறந்து வந்தான் ஸ்ரீராமன். ஆனால், தனக்கென கிடைத்த ராஜ்யத்தைத் துறந்து வந்திருந்தான் பரதன். ஸ்ரீராமன், கடமையை நிறைவேற்றக் கானகம் வந்திருந்தான். ஆனால் பரதனோ, அண்ணனின் பாதச் சுவட்டைப் பின்பற்றி, அரசைத் துறந்து, மரவுரி தரித்து, கானகம் செல்வதையே கடமையாக ஆக்கிக்கொண்டு வந்திருந்தான். ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவாரோ...? என்ற கம்பன் கவிதைக்கு அத்தாட்சியாக அங்கே நின்று கொண்டிருந்தான் பரதன். தந்தை இறந்த செய்தியைத் தெரிவித்து, தலைவன் இன்றித் தவிக்கும் அயோத்தி மக்களின் கண்ணீரைக் காரணம் காட்டி, நாடு திரும்பி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மக்களைக் காக்க வேண்டுமெனக் கதறி அழுதான் பரதன். மறைந்த தசரதனின் புகழ் வாழ வேண்டுமானால், அவர் தந்த வாக்கு நிறைவேற வேண்டும். அதற்குத் தனது ஆரண்யவாசம் ஒன்றுதான் வழி! என்று பரதனின் வேண்டுகோளை மறுத்துவிட்டான் ஸ்ரீராமன். நாடு திரும்ப ஸ்ரீராமன் விரும்பவில்லை; நாட்டை ஆள பரதன் தயாராக இல்லை.
வனவாசம் மேற்கொண்டு, தந்தை சொல் காத்த தனயன் எனப் பெருமை பெற்றான் ஸ்ரீராமன். அண்ணன் ஸ்ரீராமனுக்கு சேவை செய்ய வனவாசத்தை வலிய ஏற்று வந்து, தியாகி என்ற புகழைப் பெற்றான் லட்சுமணன். தந்தை தசரதனுக்கு ஈமச்சடங்கு செய்யும் பாக்கியம் பெற்றான் சத்ருக்னன். ஆனால், பாவி கைகேயி வயிற்றில் பிறந்த பாவத்தால், எத்தகைய பெருமையும் பெற இயலாத துர்பாக்கியவனாக நின்றான் பரதன். முடிவில், வேறு எந்த வழியும் தெரியாமல், ஸ்ரீராமபிரானின் பாதுகைகளை யாசித்தான் பரதன். அவற்றையே சிம்மாசனத்தில் வைத்து, ஸ்ரீராமனின் பிரதிநிதியாக அரசை நடத்திச் செல்ல, அனுமதி கேட்டு நின்றான் அவன். பரதனின் அன்புக்குக் கட்டுப்பட்டான் ஸ்ரீராமன். கண்ணீர் மல்க, தனது பாதுகைகளை பரதனுக்கு வழங்கினான். அண்ணலின் திருவடிகளை வணங்கி, அவரது பாதுகைகளைச் சிரத்தில் தாங்கி, அயோத்தி வந்தான் பரதன். பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து சத்ருக்னனோடு, நித்திய பூஜை செய்து வழிபட்டான். பாதுகைகளுக்குப் பட்டாபிஷேகம் செய்த பெருமை பரதனுக்குக் கிடைத்தது. என்னதான் ஸ்ரீராமன் சிறப்பானவன் என்றாலும், அரசர்கள் அமரக்கூடிய புனிதமான சிம்மாசனத்தில், பாதத்தில் அணியும் பாதுகைகளை வைக்க அனுமதிக்கலாமா? ஸ்ரீராமனுக்குப் பிரதிநிதியாக வேறு ஏதாவது உயர்ந்த பொருளை பரதன் யாசித்திருக்கக் கூடாதா? தேவர்களுக்கு ஒப்பான சூரிய குல மன்னர்கள் வீற்றிருந்த மகிமைமிக்கதொரு பீடத்தில் வெறும் பாதுகைகளா?
ராமன்தான் முடி துறந்து சென்றானே, அந்தத் திருமுடியையே சிம்மாசனத்தில் வைத்திருந்தால் போதுமே... என்றெல்லாம் சில கேள்விகள் அப்போதும் எழுந்தன; இப்போதும் எழுகின்றன. பரதன் தவறு செய்துவிடவில்லை. ஸ்ரீராமன் துறந்து சென்ற திருமுடியை சிம்மாசனத்தின் மேல் வைத்து, அதன் மீதுதான் அண்ணல் ஸ்ரீராமனின் பாதுகைகளை வைத்திருந்தான். திருமுடிக்கு மேலே அமரும் பாக்கியத்தை அந்தப் பாதுகைகள் பெற்றதற்கு ஒரு காரணமும் இருந்தது. அது-நமக்குத் தெரிந்த புராணத்தில் தெரியாத கதை! ஒருமுறை, தான் கொலு வீற்றிருக்கும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமானார். சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். வழக்கமாகத் தன் பாதுகைகளை துவார பாலகர்கள் அருகே விடும் பரந்தாமன், அன்று மட்டும் அவற்றைக் கழற்றி, ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது. திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிபுங்கவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றார் பரந்தாமன். அப்போது, பாதுகைகளை அங்கேயே விட்டுவிட்டார்.
ஆதிசேஷன் மீது அலங்காரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அது அழகாகத்தான் இருந்தது. ஆனால், பாவம்... அருகிலேயே பாதுகைகளும் இருந்தன. இது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே துவளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்? என்று கேட்டன. இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார் என்றன பாதுகைகள். பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம். கிரீடம் இப்படிச் சொன்னதும் பாதுகைகளுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான் என்று வாதிட்டன பாதுகைகள்.
கிரீடம் விடுவதாக இல்லை. சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், அந்தக் கட்சி பலமுள்ளதாக இருந்தது. பாவம்.... ஆதிசேஷன்! நடு நிலைமை வகித்து, இவற்றின் அறியாமையை எண்ணி, அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தார். தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி நின்றிருந்தன. பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். சாதுக்களை ரட்சித்து, துஷ்டர்களை சம்ஹரித்து, தர்மத்தை நிலைநாட்ட நான் அவ்வப்போது பூமியில் அவதாரம் செய்வேன். அத்தகைய அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது! என்றார் பகவான்.
சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே! ஒன்றிற் சிறியர் ஒன்றிற் பெரியராம் ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியராம் என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்க திருமுடியும, பாதுகையும் சங்கமமான கதையே பாதுகா பட்டாபிஷேகம்! வைணவக் கோயில்களில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். திருமுடி மேல் திருவடி என்பதே சடாரி. அதைத் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம் ஆணவம், அகங்காரம் ஆகியவை அழியவேண்டும் என்பதே தத்துவம்!

சிவனே என்றிரு என்பதன் பொருள் தெரியுமா?

சிவனே என்றிரு என்பதன் பொருள் தெரியுமா?

Temple images
சிவனேனு இரு என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?.. சிந்தனையை ஒருமுகப்படுத்தி இறைநினைப்பில் இருக்க வேண்டும் என்பதையே சிவனே என்றிரு என்று பெரியவர்கள் குறிப்பிட்டனர். 
திருமந்திரத்தில் திருமூலர், சிவ சிவ என்றிட தீவினை மாளும் என்கிறார். அவ்வையார், சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல என்பதன் பொருள் என்ன?

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல என்பதன் பொருள் என்ன?

Temple images
தேடிச் சென்ற விஷயம் தானாக நம் கைக்கு வந்து சேர்ந்தால், பருத்தியே புடவையாக காய்த்தது போல இரட்டிப்பு மகிழ்ச்சிஉண்டாகும் அல்லவா! அதையே இப்பழமொழியில், தெய்வதரிசனம் பெறுவதற்காக கோயிலுக்குச் செல்லும்போது நடுவழியில் 
கடவுள் காட்சி அளித்ததாக குறிப்பிடுகின்றனர். குறைந்த முயற்சியிலேயே கிடைப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.

சரஸ்வதிக்கு வீணையைக் கொடுத்தது யார் தெரியுமா?

சரஸ்வதிக்கு வீணையைக் கொடுத்தது யார் தெரியுமா?

Temple images
தூய்மையை உணர்த்தும் பொருட்டு கலைமகள் வெண்ணிற ஆடையுடுத்தி, வெண்தாமரையில் வீற்றுள்ளாள். இவளது வாகனம் வெண்ணிற அன்னம். மொழியின் வடிவான இவள் கையிலுள்ள மாலை 51 எழுத்துக்களைக் குறிப்பன. இவள் கையிலுள்ள வீணையான கச்சபியை சிவபெருமான் உருவாக்கி சரஸ்வதிக்கு வழங்கினார். இந்து மதத்தின் ஆறு உட்பிரிவுகள் மட்டுமின்றி சமண, பவுத்த மதங்களிலும் சரஸ்வதி வழிபாடு உள்ளது. ஜப்பான், பாலித்தீவு உள்ளிட்ட இடங்களிலும் கலைமகள் வழிபாடு உள்ளது.

நெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள் தெரியுமா?

நெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள் தெரியுமா?

Temple images
இந்துக்களின் வழிபாட்டில் நெருப்புஒரு முக்கிய இடம் வகுக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து 
ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும். இந்த குணங்களைக் கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி. அதுமட்டுமல்ல,
நெருப்பு இடையறாது சலனமுள்ளது.
ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும். நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி. நெருப்பு என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன். எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை  என்று வழிபட்டால் போதும். நெருப்பு மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம்.