சகிப்புத்தன்மை உள்ளவர்களே சந்தோஷமாய் இருக்கிறார்கள். ஒருவன் இயேசு கிறிஸ்துவின் நல்ல கரத்தைப் போல் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதன் தன் சக்தியை நம்ப வேண்டும். எனக்குப் புறாவைப் போல சிறகுகள் இருந்தால் பறந்து போய் இளைப்பாறுவேனே என எண்ண வேண்டும்.
செய்யக்கூடாதவை சில. விபச்சாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, வஞ்சனை செய்யாதே.
நீ செய்யக்கூடிய செயல் உன் தந்தையையும் தாயையும் பெருமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை தரும். ஆனால், ஒவ்வொரு முட்டாளும் ஏதாவது ஒரு சண்டையில் தலையிட்டுக் கொண்டே இருப்பான்.
சஞ்சலம் உள்ளவன் காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்து அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல் இருக்கிறான். அப்படி அல்லாமல் நிலையான மனம் வேண்டும்.
நியாயப் பிரமாணம் என்பது நேர்மையானவனுக்கு வகுக்கப்பட்டதல்ல. அநீதி உடையவர்களுக்கும், அடங்காத்தனம் கொண்டவர்களுக்கும், தெய்வ பயமில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், புனிதமற்றோர்களுக்கும், அக்கிரமக்காரர்களுக்கும், தாய்,தந்தையைக் கொலை செய்தவர்களுக்கும், மனிதர்களை வேட்டையாடுபவர்களுக்கும், காமாந்தகாரர்களுக்கும், தகாத கலவியில் ஈடுபடுபவர்களுக்கும், பொய்யர்களுக்கும், குரோதக்காரர்களுக்கும் மட்டுமே வகுக்கப்பட்டு உள்ளது.
ஒருவன் நீதிமானாக இருந்தாலும் அவருக்கும் ஒருநாள் கேடு வரும். ஏனெனில் சுமக்க முடியாத துயரமான சுமைகளை சக மனிதர்கள் மீது அவன் சுமத்தி விடுகிறான். தன் விரலால் கூட கஷ்டமான காரியங்களை தொட்டுப் பார்ப்பதில்லை. கஷ்டத்தை எதிர்கொள்பவன்தான் வாழ்வில் வெற்றி அடைகிறான்.
இயேசுவான நான் சத்தியத்திற்கு சாட்சியாகவே பிறந்தேன். அதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தேன். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவன் எவனும் என் குரலுக்கு காது கொடுக்கிறான்.
ஒரு மனிதனுக்கு எதிரிகள் வேறு எங்கும் இல்லை. அவனது சத்ருக்கள் அவனுடைய வீட்டில் இருப்பவர்கள்தான்.