நம் தேவைகளுக்கு கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டுமா?

நம் தேவைகளுக்கு கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டுமா?


நாம் வேண்டிக் கொள்ளும் முன்பே நம் தேவையை அறிந்தவர், நமக்காக யாவையும் ஆயத்தம் பண்ணி வைத்திருப்பவர், நமது தேவைகளை நிறைவேற்றலாமே. ஏன் நம் தேவைகளை அவரிடம் ஜெபிக்க வேண்டும்.? இது அநேகருடைய கேள்வி. வங்கியிலே நமது தேவைக்காகவே பணம் வரவில் வைக்கிறோம். அதாவது, தேவைகள் ஏற்பட்டு விடுவதற்கு முன்னமே பணம் ஆயத்தமாயிருக்கிறது. ஆனால், தேவைகள் ஏற்படுமிடத்து அப்பணம் நம்க்கு உதவுமா? இல்லை. நாம் எழுந்து வங்கிக்குப் போய், தேவையான காரியங்களை நிறைவேற்றி, "என் கணக்கில் உள்ள பணம் எனக்கு வேண்டும்" என்று விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் சிறிது நேரம் காத்திருக்கவும் வேண்டும். அதன்பின்புதான் நமது தேவைகள் சந்திக்கப்படத் தேவையான பணம் நம் கைக்குக் கிடைக்கிறது.

அது போலவே, நம் பரமபிதாவும் தமது பிள்ளைகளாகிய நம்க்காகவே யாவையும் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறார். அவரிடத்தில் மன்னிப்பு உண்டு; இரட்சிப்பு உண்டு; சகல ஆசிர்வாதங்களும் உண்டு. ஆனால், நாம் கேட்காவிட்டால் அவர் எப்படி மன்னிக்க முடியும்? எப்படி இரட்சிக்க முடியும்? எப்படித் தர முடியும்? வழியருகே நின்று, "தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்" என்று சத்தமிட்டுக் கதறிய பிறவிக் குருடனை இயேசு உடனே சொஸ்தமாக்கவில்லை. மாறாக, கேள்வி கேட்கிறார். "உனக்கு என்ன வேண்டும்?" குருடன் பார்வையைத் தவிர என்னதான் கேட்பான்? இயேசு அவன் தேவையை அறிந்தவராயினும், அவன்தானே தனது தெவை இன்னது என்பதை உணர்கிறானா, என்பதையே ஆண்டவர் சோதித்தறிகிறார்.

ஜெபம் என்பது தெவனுக்குத் தெரியாத ஒன்றை அவருக்குத் தெரிய வைப்பதல்ல. வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகின்ற அல்லது, தேவனுக்குச் சித்தமில்லாததை நிறைவேற்றும்படிக்கு அவரைத் தூண்டிவிடுகின்ற கருவியும் அல்ல. மாறாக, ஜெபிக்கும் போது தேவனுக்கல்ல, நமக்கு நாமேதான் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறொம். ஜெபம் ஒரு கை போன்றது. ஜெபிக்கும் போது அது நீள்கின்றது. தம்து குமாரனுக்குள் பிதாவானவர் நம்க்காக வைத்திருக்கும் உன்னத ஆசிர்வாதங்களை அது எடுத்துக் கொள்கிறாது. தேவ வல்லமையைப் பெற்றுக் கொள்கிறது.

ஆம், பிரியமானவர்களே, நாம் ஜெபிக்க வேண்டுமென்றும், தம்மோடு பெச வேண்டுமென்றும் நம் பிதா விரும்புகிறார். "கேளுங்கள்" என்கிறார். "நீங்கள் கேட்டதைப் பெற்றுக் கொள்வீர்கள்" என்கிறார். (மாற்.11:14) நாம் விண்ணப்பம் பண்ணாததினாலேயே பல ஆசிர்வாதங்களை இழந்து விடுகிறோம். ஆகவே, நாம் கர்த்தருடைய பிள்ளையாக இருந்து தைரியத்தோடே அவரிடம் வேண்டுதல்களை முன் வைப்போமாக.