திருவெம்பாவை விரதம் |
திருவெம்பாவை விரதம் மார்கழி மாதம் திருவெம்பாவைக்கு முந்திய பத்து நாட்கள் பெண்களால் கைக்கொள்ளப்படும் விரதம் வைணவப் பெண்களும் ஒருவரை ஒருவர் துயிலெழுப்பி நீர்த்துறையில் நீராடி கண்ணனைப்போல உருவம் செய்து கண்ணனே கணவனாக வரவேண்டுமென்று வேண்டி, நெய், பால் உண்ணாது, மையிட்டெழுதாது, மலரிட்டு முடியாது தீய சொற்களைக் கூறாது ஐயமும் பிச்சையுமிட்டு இவ்விரதத்தை மார்கழி முப்பது நாட்களும் மேற்கொண்டனர் என்று "திருப்பாவை" கிருஸ்ண பாகவதத்திற்கு இயையக் கூறுகின்றது. திருவெம்பாவையில் கன்னிப் பெண்கள் சிவனடியார்களே தமக்குக் கணவராக வரவேண்டுமென்றும் நாடுமலிய மழைபெய்ய வேண்டும் என்றும் விரும்புவதாகக் குறிப்பிடப்படுகின்றது. |