ஓம் ஸ்ரீ நமசிவாய நமஹ ||
பைரவர்மூலமந்தரம் ;
ஓம் ஹ்ரீம் வம் வடுகாய அபதுத்தாரனாய
குரு குரு வடுகாய ஹ்ரீம்||
ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம்
ஹ்ரெளம், க்ஷம், க்ஷேத்ரபாலாய நம:
பைரவர் காயத்ரீ;
சுவாந த்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||
ஒம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே க்ஷேத்ரபாலாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||
நிசாசராய வித்மஹே சுவைஹய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||
சிவபகவானின் அவதாரங்களில் பைரவர் அவதாரமும் ஒன்று சனிபகவானின் குரு பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீ பைரவர் அவதாரமும் 64 வகைகள் உண்டு பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.
தலையில் மேஷஇராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முனங்களில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன.
ஸ்ரீ நவ பைரவர் மூர்த்தியின் பெயர்கள்: 1) அசிதாங்க பைரவர். 2)ருரு பைரவர்.3)சண்டை பைரவர்.4)குரோதன பைரவர்.5)உன்மத்த பைரவர்.6)கபாலபைரவர்.7)பிஷ்ண பைரவர்.8)சம்ஹார பைரவர்.9)சொர்ணாகர்ஷண பைரவர். ஆகிய பைரவ மூர்த்திகள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் மாலையில் சூரியபகவான் மறைவு நேரத்தில் பைரவர் தரிசனம் செய்து வழிபடவும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் உரிய
கால பைரவர் திருத்தலங்கள்
அசுபதி = பேரூர் ஞானபைரவர்(கோயம்புத்தூர் அருகில்)
பரணி = பெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர்(காரைக்குடி அருகில்)
கார்த்திகை=அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்
ரோகிணி= திருக்கண்டியூர் வடுகபைரவர்(அட்டவீரட்டானங்களில் ஒரு வீரட்டானம் இது)
மிருகசீரிடம்= க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணம் டூ மாயவரம்/மயிலாடுதுறை)
திருவாதிரை= திருவண்டார்கோவில்(பாண்டிச்சேரி)
புனர்பூசம்=சாதுசுவாமிகள் மடாலயம்,விஜயபைரவர்,பழனி ரோப்கார் மையம் எதிரே.
பூசம்=ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவர்
ஆயில்யம்=காளஹஸ்தி பாதாளபைரவர்
மகம்=வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவர்
பூரம்=பட்டீஸ்வர பைரவர்
உத்திரம்=சேரன்மஹாதேவி அம்மநாதர்+ஆவுடையம்மன்கோவில் ஜடாமண்டலபைரவர்
அஸ்தம்=திருப்பத்தூர் யோகபைரவர்
சித்திரை=தர்மபுரி கோட்டை
கல்யாணகாமாட்சி அம்பிகை உடனுறை அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்
சுவாதி=பொற்பனைக்கோட்டை(திருவரங்குளம்) பைரவர்,புதுக்கோட்டை அருகே
விசாகம்=திருமயம் கோட்டை பைரவர்
அனுஷம்=ஆடுதுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர்
கேட்டை=சூரக்குடி கதாயுதபைரவர்(காரைக்குடி அருகே பள்ளத்தூர்)
மூலம்=சீர்காழி சட்டநாத ஆகாசபைரவர்
பூராடம்=அவிநாசி காலபைரவர்
உத்திராடம்=கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பைரவர்
திருவோணம்=வைரவன்பட்டி
மார்த்தாண்டபைரவர்
அவிட்டம்=சீர்காழி அஷ்டபைரவர்
சதயம்=சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்
பூரட்டாதி=(திருச்செங்கோடு)கொக்கராயன்பேட்டை ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்
உத்திரட்டாதி=(கும்பகோணம்)சேங்கனூர் வெண்கல ஓசை உடைய பைரவர்
ரேவதி=தாத்தையங்கார்பேட்டை
ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலய பஞ்சமுகபைரவர்
நாகப்பட்டனம் மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் அஷ்டபைரவர்களுக்கு என தனி சன்னதி உள்ளது.
கொடிய தோஷங்களை போக்கும் பாதாள பைரவர்
ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.
வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.
ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் பாதாள பைரவர் என அழைக்கப்படுகிறது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் மேலும் சிறப்பு தருவதாக அமையும்.
சிவந்த ஜடையும் பரிசுத்தமான உடலும் சிவந்த தேஜஸும் சூலம் கபாலம் உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும் நிர்வாணமாகவும் நாயினை வாஹனமாகவும் கொண்டு முக்கண்ணனாக ஆனந்த வடிவினனாக பூத பிரேதநாதனாக க்ஷேத்திரங்கள் க்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.
பைரவர்க்கு தேய்பிறைஅஷ்டமி விரதம் சிறந்து ஓவ்வொரு அஷட்மிக்கும் ஓவ்வொரு பெயர் உண்டு .
அஷ்டமியை பஞ்சங்கம் இல்லாமல் கண்டறியும் முறை பெளர்ணமி மற்றும் அமாவசை திதி அடுத்து 8 வது திதி ஆகும்.
தேய்பிறை அஷ்டமி என்பது பெளர்ணமி கழித்து 8வது நாள் தேய்பிறை அஷ்டமி.
தேய்பிறை அஷ்டமியை தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்
ஏனெனில் மார்கழி மாதம் வானுலகில் பிரம்ம மூக்ஷர்த்த காலம் .
1, மார்கழி தேய்பிறை அஷ்டமி- சங்கராஷ்டமி
2, தை தேய்பிறை அஷ்டமி- தேவ தேவாஷ்டமி
3, மாசி தேய்பிறை அஷ்டமி- மகோஸ்வராஷ்டமி
4, பங்குனி தேய்பிறை அஷ்டமி- திரியம் பகாஷ்டமி
5, சித்திரை தேய்பிறை அஷ்டமி- ஸ்நாதனாஷ்டமி
6, வைகாசி தேய்பிறை அஷ்டமி- சதாசிவாஷ்டமி
7, ஆனி தேய்பிறை அஷ்டமி- பகவதாஷ்டமி
8, ஆடி தேய்பிறை அஷ்டமி- நீலகண்டாஷ்டமி
9, ஆவணி தேய்பிறை அஷ்டமி- ஸ்தானுஷ்டமி
10, புரட்டாசி தேய்பிறை அஷ்டமி- ஜம்புகாஷ்டமி
11, ஐப்பசி தேய்பிறை அஷ்டமி- ஈசானசிவாஷ்டமி
12, கார்த்திகை தேய்பிறை அஷ்டமி- ருத்ராஷ்டமி
அஷ்டமி நாட்கள் தட்சினாமூர்த்தி வழிபாடும் சிறந்தது
தீயோர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவும், அத்தீயோரால் பயம் கண்டோரின் பயத்தைப் போக்கவும் வெளிப்பட்டது பைரவர் அவதாரம். சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவரும், சிவகணங்களுக்கு தலைவருமானவர் பைரவர். பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமானின் ஆணைப்படி ருத்திரர், உருக்கொண்டு பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தவர்.
அறுபத்து நான்கு திருவடிவங்களாகக் கூறப்பட்டுள்ள பைரவரின் தலை மீது தீ ஜுவாலை, திருவடிகளில் சிலம்பு, மார்பில் கபால மாலை துலங்குவதைக் காணலாம். இவர் முக்கண் கொண்டவர். திரிசூலம், கபாலம், நாகபாசம், உடுக்கை, டமருகம் போன்றவற்றை கரங்களில் ஏந்தி நாகத்தையே பூணூலாகத் தரித்தவர். ஆடை அணியா அழகராகக் காட்சி தருபவர். சிவன்கோயில்களில் வடகிழக்கு மூலையில் அருள்பாலிப்பவர்.
காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்தஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் பூட்டிய திருச்சன்னிதிகளின் அனைத்து சாவிகளையும் பைரவரின் திருவடிகளில் சமர்ப்பித்த பின்னரே கோயிலைச் சாத்துவது மரபு. கோயிலில் காவலராக இருந்து எந்த இடையூறோ, இழப்போ ஏற்படாமல் பாதுகாப்பதால் இவரை க்ஷேத்ரபாலகர் என்று பக்தர்கள் வணங்குகின்றனர்.
பைரவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, தேன், அவல் பாயசம், தயிர்சாதம், செவ்வாழை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட, மனதில் ஏற்படும் பயம், கடன் தொல்லை நீங்கும், திருமணம், வீடு கட்டுதல், வேலை வாய்ப்பு, வியாபார முன்னேற்றமும் ஏற்படும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பைரவருக்கு உகந்தது வெள்ளை வஸ்திரம். தயிர் அன்னம், தேங்காய் போன்ற வெண்ணிற உணவுகள். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட பைரவர் வழிபாடு சிறந்தது.

- அசிதாங்க பைரவர்
- ருரு பைரவர்
- சண்ட பைரவர்
- குரோதன பைரவர்
- உன்மத்த பைரவர்
- கபால பைரவர்
- பீக்ஷன பைரவர்
- சம்ஹார பைரவர்
வரிசை | பைரவர் பெயர் | வாகனம் | சக்தி வடிவம் | கிரக அதிபதி | கோயில் |
---|---|---|---|---|---|
1 | அசிதாங்க பைரவர் | அன்னம் | பிராம்ஹி | குரு | விருத்தகாலர் கோயில் |
2 | ருரு பைரவர் | ரிசபம் | காமாட்சி | சுக்ரன் | காமட்சி கோயில் |
3 | சண்ட பைரவர் | மயில் | கௌமாரி | செவ்வாய் | துர்க்கை கோயில் |
4 | குரோதன பைரவர் | கருடன் | வைஷ்ணவி | சனி | காமாட்சி கோயில் |
5 | உன்மத்த பைரவர் | குதிரை | வராகி | புதன் | பீம சண்டி கோயில் |
6 | கபால பைரவர் | கருடன் | இந்திராணி | சந்திரன் | லாட்பசார் கோயில் |
7 | பீக்ஷன பைரவர் | சிங்கம் | சாமுண்டி | கேது | பூத பைரவ கோயில் |
8 | சம்ஹார பைரவர் | நாய் | சண்டிகை | ராகு | திரிலோசன கோயில் |