மனிதர்களில் நீங்கள் எந்த வகை தெரியுமா?
பேராசைக்காரன் - எல்லாமே என்னுடையது என்னுடையது. உன்னுடையதும் என்னுடையது என்பான். சராசரி மனிதன் - என்னுடையது என்னுடையது. உன்னுடையது உன்னுடையது என்பான். உத்தமன் - உன்னுடையதும் உன்னுடையது. என்னுடையதும் உன்னுடையது என்பான். ஞானி - உன்னுடையதுமன்று என்னுடையதுமன்று. எல்லாமே இறைவனுடையது என்பானாம். இதில் நீங்கள் எந்த வகை என்பது உங்களுக்கே தெரியும். | |