நாம் யார் யார் பின்னால் செல்ல வேண்டும் தெரியுமா?
* பஞ்சமகா யக்ஞம் எனப்படும் ஐந்து வகை யாகங்களை தவறாமல் செய்யும் ஒரு வேதியர் வந்தால் அவருக்கு வழிவிட்டு பின்னால் செல்ல வேண்டும். * கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் போ. * பசுக்கள் பின்னால் வந்தால், அதற்கு வழிவிட்டு பின்னால் போ. * யானை பின்னால் வந்தால், அதை முதலில் விட்டு பின்னால் நட. * தலையில் கனமான பொருளை எடுத்துக் கொண்டு ஒருவர் பின்னால் வந்தால், அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல். இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், அதன் பாததூளி (தூசு) நம் மீது பட்டு உடல் சுத்தம், பேச்சில் சுத்தம், மனச்சுத்தம் ஏற்படுவதாக ஐதீகம். | |