அதர்வண வேதம் கூறும் உலகத்தின் வயது எவ்வளவு தெரியுமா?

அதர்வண வேதம் கூறும் உலகத்தின் வயது எவ்வளவு தெரியுமா?

Temple images
நூறாண்டு காலம் வாழ்க என்று தான் நாம் வாழ்த்துகிறோம். ஆனால், 43கோடியே 20 லட்சம் ஆண்டுகள் வாழ்க என்கிறது அதர்வண வேதம். வியாசர் அதர்வண வேதத்தை சுமந்து என்னும் முனிவருக்கு உபதேசித்து மக்களிடம் பரவச் செய்தார். இதில் 20 காண்டங்களும், 5038 செய்யுள்களும் உள்ளன. வருணன், அக்னி, விஷ்ணு, வாசஸ்பதி, சோமன், இந்திரன், மருத்து, அஸ்வினி தேவர்கள், சூரியன், வாயு, கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள் போன்ற தேவதைகள், இயற்கைச் சக்திகள் பற்றிய தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தர்வ என்றால் பயம். அதர்வம் என்றால் பயமற்ற தன்மையைத் தருவது என்பது பொருள். இச்சொல்லே அதர்வணம் என திரிந்தது. தீயசக்திகளிடம் இருந்தும், சம்சார பந்தத்தில் இருந்தும் ஏற்படும் அச்சத்தைப் போக்குவதால் அதர்வண வேதம் என்னும் பெயர் உண்டானது. 

தற்காலத்தில், அதர்வண காளி வழிபாடு முக்கியம் பெற்றுள்ளது. பிரத்யங்கிரா, காளி போன்ற சக்திகளே இவர்கள். கலியுகத்தில் மக்கள் தங்கள் பயத்தைப் போக்க இந்த தெய்வங்களுக்கு வழிபாடு நடத்துகிறார்கள். அதர்வண வேதத்தில் உலகத்தின் வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நூறால் பத்தாயிரத்தைப் பெருக்கி வருவதுடன் இரண்டு, மூன்று, நான்கு என்ற எண்களைச் சேர் என்ற குறிப்பு இதில் உள்ளது. அதாவது,  43 கோடியே 20 லட்சம்  ஆண்டுகள். இதனை ஆயிரம்  சதுர்யுக ஆண்டுகள் என்று  குறிப்பிடுவர். இவ்வளவு  காலமும், ஒருவன் வாழ வேண்டும் என நம் ஆயுள் நீடிக்கவும் இந்த  வேதம் வாழ்த்துகிறது.

அடேங்கப்பா! இவ்ளோ வருஷம் வாழலாமா?