ஓம் ஸ்ரீ கற்பக சக்தி விநாயகர் போற்றி ! போற்றி !!
*********************************************************************************************************
மூலவர் : அருள்மிகு ஸ்ரீ கற்பக சக்தி விநாயகர்
தல விருட்சம் : அரசமரம் , வேப்பமரம்
பழமை : 18-ம் நூற்றாண்டில் தோன்றிய திருக்கோவில் *********************************************************************************************************
அற்புத கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெல்லாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர் பொய்யில்லை கண்ட உண்மை

தல சிறப்பு :
* ஸ்ரீ முருக பெருமான் ஈசான்ய மூலையில் நின்ற நிலையில்
அருள்புரிகின்றார்.
* ஸ்ரீ கன்னிமார்கள் அக்னி மூலையில் சுயம்பு வடிவில்
அருள்புரிகின்றனர்.
* ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் , ஸ்ரீ பத்மாவதி தாயாருடன் சுயம்பு வடிவில்
அருள்புரிகின்றனர்.
* ஸ்ரீ பொன்னி அம்மன் சிம்ம வாகனத்துடன் சுயம்பு வடிவில்
அருள்புரிகின்றார்.
* சுவாமி ஐயப்பன் சிறப்பு வழிபாட்டு பூஜை கார்த்திகை மற்றும்
மார்கழி இரண்டு மாதங்களில் குருசாமி அவர்களால் சிறப்பாக
நடத்தப்படுகிறது. மாலை நேர பூஜையின் நிறைவில் அன்னதானம்
வழங்கப்படுகிறது.
* இத்திருக்கோவிலில் இருக்கும் அப்பாச்சி பீடத்தில் ஸ்ரீ மும்மூர்த்திகள்
சுயம்பு வடிவில் அருள்புரிகின்றனர்.
தல வரலாறு :
திருக்கோவில் அமைவிடம் :
அருள்மிகு ஸ்ரீ கற்பக சக்தி விநாயகர் திருக்கோயில்
அப்பாச்சி மடம்
ஆர்.கே.வி. ரோடு
ஈரோடு - 638 003
தமிழ்நாடு
அலைபேசி எண் : 99431 89435
https://plus.google.com/109146876378852598994/about?gl=IN&hl=en-IN
* இத்திருக்கோவிலில் மூலவர் இடம்புரி கணபதி ஆகவும்,
ஜல விநாயகர் வலம்புரி கணபதி ஆகவும்
அரசமரம் மற்றும் வேப்பமரம் அருட்கொடையின் கீழ்
அமர்ந்து காட்சி தந்து அருள்புரிகின்றனர்.
* ஸ்ரீ முருக பெருமான் ஈசான்ய மூலையில் நின்ற நிலையில்
அருள்புரிகின்றார்.
* ஸ்ரீ கன்னிமார்கள் அக்னி மூலையில் சுயம்பு வடிவில்
அருள்புரிகின்றனர்.
* ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் , ஸ்ரீ பத்மாவதி தாயாருடன் சுயம்பு வடிவில்
அருள்புரிகின்றனர்.
* ஸ்ரீ பொன்னி அம்மன் சிம்ம வாகனத்துடன் சுயம்பு வடிவில்
அருள்புரிகின்றார்.
* சுவாமி ஐயப்பன் சிறப்பு வழிபாட்டு பூஜை கார்த்திகை மற்றும்
மார்கழி இரண்டு மாதங்களில் குருசாமி அவர்களால் சிறப்பாக
நடத்தப்படுகிறது. மாலை நேர பூஜையின் நிறைவில் அன்னதானம்
வழங்கப்படுகிறது.
* இத்திருக்கோவிலில் இருக்கும் அப்பாச்சி பீடத்தில் ஸ்ரீ மும்மூர்த்திகள்
சுயம்பு வடிவில் அருள்புரிகின்றனர்.
தல வரலாறு :
இத்திருக்கோவில் உருவாவதற்கு முன்னர் இவ்விடம் புதர் மற்றும்
பாறைக்கற்களால் சூழ்ந்து காடாக இருந்தது. பாம்புகள் மற்றும் தேள்கள் நிறைந்த
இடமாகவும் இருந்தன. இவ்விடத்தில் அப்பாச்சி சாமியார் என்பவர் சிவலிங்கம் வைத்து,
காவிரி ஆற்றில் இருந்து நீரை எடுத்து வந்து தினசரி அபிஷேகம் செய்து, இவ்விடத்திலேயே
நீண்ட காலமாக தங்கி, இவரை நாடி வருவோர்களின் மனக்கவலை மற்றும்
உடல்குறைகளையும் தீர்த்து வைத்துள்ளார். இவர் வழங்கும் திருநீற்றிற்கு அபரிமிதமான இறைசக்தி உண்டு என்பர்.
சிவபூஜை செய்து தியானத்தில் இருக்கும் பொழுது, இவரது ஆத்மா இறைவனடி இணைந்தது.
24 மனை தெலுங்கு செட்டியார் என்ற இனத்தவரால், இவ்விடம்
வாங்கப்பட்டு, சாமியாரின் சமாதியின் மேல் பெரிய கோபுர வாசல் அமைத்து,
"அப்பாச்சி மடம் " என்று திருப்பெயர் சூட்டி பூஜை செய்து வந்தனர்.
இப்பீடத்தினுள் ஸ்ரீ மும்மூர்த்திகள் சுயம்பு வடிவில் அருள்புரிகின்றனர்.
பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் நாகம்,
இரவு நேரத்தில் சமாதி பீடத்தை வலம் வந்து அரசமரத்தின் மீது ஏறி விடுவதை, இரண்டு மாதங்கள் கோவிலில் தங்கி ஐயப்ப பூஜையில் உள்ளவர்கள் பார்த்திருக்கிறார்கள். யாரையும் தீண்டுவதில்லை.
தல வழிபாடு :

* ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தி அன்று " ஸ்ரீ கற்பக சக்தி விநாயகர் " க்கு மாலை நேரத்தில் சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சங்கடஹர சதுர்த்தி சிறப்பிக்கப்படுகிறது.
* ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் தேதியன்று விடியற்காலையில் கரும்பு பந்தல் அமைத்து " ஸ்ரீ கன்னிமார்கள் " அம்மனுக்கு, வந்திருக்கும் பெண்கள் தங்கள் கைகளால்
சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து ஸ்ரீ கன்னிமார் பூஜை சிறப்பிக்கப்படுகிறது.
* ஒவ்வொரு வருடமும்,
தை மாதம் பூச நட்சத்திரத்தன்று " ஸ்ரீ முருக பெருமான் "
பங்குனி மாதத்தில் " ஸ்ரீ பொன்னி அம்மன் "
புரட்டாசி மாதத்தில் " ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீ பத்மாவதி தாயார் "
ஆடி மாதம் 18-ல் அப்பாச்சி பீடத்தில் உள்ள "ஸ்ரீ மும்மூர்த்திகள்"
சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.
* ஒவ்வொரு வருடமும் வளர்பிறை சதுர்த்தி அன்று வரும், " ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி " விடியற்காலையில் ப்ரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு யாகம்
மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்படுகிறது.
நடை திறந்திருக்கும் நேரம் :
* காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை.